Anurag Thakur | "எப்ஸ்டீன் ஃபைல்ஸில் நானா?" - அனுராக் காஷ்யப் பரபரப்பு விளக்கம்
Anurag Thakur | "எப்ஸ்டீன் ஃபைல்ஸில் நானா?" - அனுராக் காஷ்யப் பரபரப்பு விளக்கம் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் = "நான் அவன் இல்லை" - அனுராக் காஷ்யப் விளக்கம் எப்ஸ்டீன் ஃபைல்சில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு நான் சென்றதில்லை என இயக்குனர் அனுராக் காஷ்யப் விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ். இதில், பிரிட்டீஷ் இளவரசர் ஆண்ட்ரூ, பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் போன்ற ஏராளமான பிரபலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய சில மின்னஞ்சல்களில், ஒரு நிகழ்ச்சிக்கு பாலிவுட் இயக்குனர் ஒருவர் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இயக்குனர் அனுராக் காஷ்யப் என்று தகவல் பரவி வருகிறது. இந்த சர்ச்சை குறித்து பதிலளித்த அனுராக் காஷ்யப், மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு, தாம் சென்றதில்லை என்று கூறியுள்ளார். தனது பெயரில் வெளியாகும் தகவல்கள், தான் இயக்கும் படங்களை விட பிரபலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
