சமஸ்கிருத மொழியில் முதன் முதலாக அனிமேஷன் படம் ஒன்று வெளியாகிறது. "புண்ணிய கொடி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசைமைத்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த கன்னட நாட்டுப் புற பாடலையும் அதன் கதையையும் மையமாக கொண்டு உருவான 'புண்ணிய கொடி" படத்தை இன்ஃபோசிஸில் பணிபுரியும் ரவி சங்கர் என்பவர் தயாரித்துள்ளார். ஒரு பசு மற்றும் அதை வேட்டையாட துடிக்கும் புலி என இருவருக்கு இடையேயான போராட்டமே இந்த படத்தின் கதையாகும்.