"விஜய் சேதுபதி திரைப்படத்திலிருந்து சம்பளத்திற்காக நீக்கவில்லை" - அமலாபால் விளக்கம்

நடிகர் விஜய் சேதுபதியின் 33வது திரைப்படத்தில் நடிக்கவிருந்த அமலாபால் நீக்கப்பட்டது குறித்து சர்ச்சையானது.
"விஜய் சேதுபதி திரைப்படத்திலிருந்து சம்பளத்திற்காக நீக்கவில்லை" - அமலாபால் விளக்கம்
Published on
நடிகர் விஜய் சேதுபதியின் 33வது திரைப்படத்தில் நடிக்கவிருந்த அமலாபால் நீக்கப்பட்டது குறித்து சர்ச்சையானது. இந்நிலையில், அமலாபால தமது விளக்கத்தை கடிதமாக வெளியிட்டார். அவரது விளக்கத்தில், 'தயாரிப்பு நிறுவனத்துடன் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறியே, படத்தில் இருந்து நீக்கியதாக தெரிவித்தார். 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கூறியிருந்ததை விட சம்பளம் குறைவாக கொடுத்த போதும், தாம் புகார் கொடுக்கவில்லை என்றும், 'ஆடை' படத்திற்கும் சம்பளம் குறைவாகவே வாங்கியதாகவும், தெரிவித்தார். 'விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகை என்பதால், இந்த படத்தில் நடிக்க உற்சாகமாக இருந்ததாக தெரிவித்த அமலாபால், 'தயாரிப்பு நிறுவனத்தின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த கடிதத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com