நான் திடீர் தளபதியா? - மேடையில் SK சொன்ன யாருமே எதிர்பாரா பதில்
மதராஸி படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மான் கராத்தே இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தாம் கூறியதை சிலர் கேலி செய்ததாக கூறினார்.
கோட் படத்தில் தவெக தலைவர் விஜய் உடன் இருந்த காட்சி தனக்கு பெரிய ஊக்கமாக இருந்தது என்றும்,
அதனால் சிலர் குட்டி தளபதி, திடீர் தளபதி என தன்னை அழைப்பதாகவும் அவர் கூறினார்.
விஜய் ரசிகர்களை தாம் கவர முயற்சிப்பதாக சிலர் கூறுவதாகவும், அதற்கு சாத்தியமே இல்லை,
ரசிகர்கள் என்பவர்கள் கடவுள் கொடுத்த வரம், திருட முடியாது என்றும் அவர் கூறினார்.
5 முறை ஐபிஎல் கோப்பை வென்ற எம்.எஸ்.தோனி மீதும் விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
