அல்லு அர்ஜுனின் அடுத்த படம்.. மாஸ் கேரக்டர் - இந்தியாவே ஆச்சரியப்பட போகுது
Actor Allu Arjun | அல்லு அர்ஜுனின் அடுத்த படம்.. மாஸ் கேரக்டர் - இந்தியாவே ஆச்சரியப்பட போகுது
புஷ்பா 2க்கு அப்றம் அல்லு அர்ஜுன் அடுத்து நம்ம அட்லி இயக்கத்துல நடிக்கப் போறாருங்குறது எல்லாருக்கும் தெரியும்...
அடுத்து த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் நம்ம அல்லு அர்ஜுன வச்சு ஒரு படம் இயக்கப் போறாரு...
இந்தப்படம் தான் புராண கதைய அடிப்படையா வச்சு உருவாகவிருக்கு...
ஃபர்ஸ்ட் என்ன சொன்னாங்கன்னா இது மகாபாரதத்த அடிப்படையா வச்சு உருவாகுற படம்னு சொன்னாங்க...
ஆனா ப்ரொடியூசர் நாகவம்சி என்ன சொல்லிருக்காருன்னா...“இது புராண படம் தான்...கண்டிப்பா இந்தியாவே ஆச்சரியப்படுற மாதிரி படம் இருக்கும்...ஆனா அது ராமாயணமோ...மகாபாரதமோ இல்ல...அதிகம் கேள்விப்படாத புராண கதைகள அடிப்படையா வச்சு படத்த தயாரிக்குறோம்“னு விளக்கம் தந்துருக்காரு...
இந்த படப்பிடிப்பு அக்டோபர்ல தொடங்கப் போறதா சொல்லப்படுது...
நம்ம அல்லு அர்ஜுன் முருகனா நடிக்கப் போறதாவும் ஒரு தகவல் சுத்திட்டு இருக்கு...
அதனால ரசிகர்கள் பெரும் ஆவலோட காத்துக்கிட்டு இருக்காங்க...
