Alia Bhatt Video | `வீடியோ’ மூலம் எல்லோருக்கும் கசிந்த விவகாரம் - மனம் கொந்தளித்த ஆலியா பட்
புதிய வீட்டின் வீடியோ வைரல் - நடிகை ஆலியா பட் கண்டனம்
தன்னுடையை வீட்டை வீடியோ எடுத்து வெளியிட்ட நபர்களுக்கு நடிகை ஆலியா பட் இன்ஸ்டா பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் ரன்பீர் கபூருடன் வசிக்கும் நடிகை ஆலியா பட், புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து வீடியோ வைரலானது. இந்த வீடியோ தனியுரிமையை மீறுவதாக கூறிய ஆலியா பட், ஒரு வீட்டின் ஜன்னல் அடுத்த வீட்டை பார்த்தபடி தான் இருக்கும், ஆனால்
அதற்காக வீடியோ எடுத்து வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். அந்த வீடியோக்களை உடனே நீக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
