அஜித்குமாரின் வீரம் படத்தால் தனது சினிமா வாழ்க்கையே பாதிக்கப்பட்டதாக, நடிகை மனோ சித்ரா வேதனை தெரிவித்துள்ளார். அவள் பெயர் தமிழரசி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மனோ சித்ரா, வீரம் படத்தில் தமன்னாவின் தோழியாக நடித்திருந்தார். இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள மனோ சித்ரா, வீரம் படத்தில் தமன்னா பாதியில் இறந்து விடுவார் என்றும், இறுதியில் அஜித்துக்கு நான் தான் ஜோடி என்று படக்குழுவினர் முதலில் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் போகப்போக அது உண்மை இல்லை என்று உணர்ந்து கொண்டதாகவும், கதாநாயகியாக இருந்திருக்க வேண்டிய தனது சினிமா கேரியர், வீரம் படத்தால் பாதிக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்