அடுத்த ரேஸ்க்கு தயாரான அஜித்குமார் - வீடியோ வைரல்
அடுத்த ரேஸ்க்கு தயாரான அஜித்குமார் - வீடியோ வைரல்
நடிகர் அஜித்குமார் அடுத்த ரேஸ்க்கு தயாராயிட்டாரு.. ஸ்பெயின்ல பந்தய ஃபீல்டுல அவர் சுத்திட்டு இருக்க வீடியோ செம்ம வைரலா ஓடிட்டு இருக்கு...
ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த பிரமாண்டம் - ஷூட் தொடக்கம்
ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படத்தோட ஷூட்டிங் மாஸான ஆக்ஷன் காட்சியோட தொடங்கியிருக்கு...கேஜிஎஃப் யூனிவர்ஸ், சலார் படங்களை கொடுத்து இந்தியா முழுதும் பேமஸ் ஆனவரு பிரசாந்த் நீல்.. மறுபக்கம் சொல்லவே தேவையில்ல ஜூனியர் என்.டி.ஆர் பான் இந்தியா பிரபலம்...இவங்க ரெண்டு பேரும் சேரப்போறாங்க தகவல் ஹாட் நியூஸா சினிமா உலகத்துல சுத்த, ஒரே மாஸான சீன ஷூட் பண்ணி, நாங்க படப்பிடிப்பை ஸ்டார்ட் பண்ணிட்டோம்னு சொல்லியிருக்காங்க...
கவனம் ஈர்க்கும் ஹனிரோஸின் இன்ஸ்டா ஸ்டோரி
தமிழ்ல பெரிய ஹிட் படம் இல்லைனாலும், மலையாளத்துல ஃபேமஸான ஹீரோயினா வலம் வர ஹனிரோஸ், இன்ஸ்டால அடுத்தடுத்து பகிர்ந்த ரீல்ஸ் ரசிகர்களை கவர்ந்திருக்கு...பிளாக் டிரஸ்ல எடுத்த போட்டோ சூட்டை இன்ஸ்டா ஸ்டோரியா வச்சியும் ஹனிரோஸ் ரசிகர்களுக்கு ஹாய் சொல்லியிருக்காங்க...
பேட்டால் மேஜிக் - வியக்க வைத்த ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், எந்த சப்போர்ட்டும் இல்லாம பேட்டை தரையில நிக்க வச்ச வீடியோ ரசிகர்களை கவர்ந்திருக்கு...
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியப்ப இந்த வேலைய ஸ்மித் செய்ய, இதை பார்த்து வியந்திருக்காங்க ஆஸ்திரேலிய டீம்காரங்க..
ஏற்கனவே இங்கிலாந்து பிளேயர் ஜோ ரூட் இதே மாதிரி களத்துல செஞ்சதையும், அதை நம்ம விராட் கோலி டிரை பண்ணதையும் மறக்க முடியுமா?....
இந்திய அணிக்கு குட் நியூஸ் - ஃபக்கர் ஜமான் அவுட்
காயத்தால சாம்பியன்ஸ் டிராபி தொடர்ல இருந்து பாகிஸ்தான் அதிரடி பேட்டர் ஃபக்கர் ஜமான் Fakhar Zaman வெளியேறிட்டாரு..நியூசிலாந்துக்கு எதிரா பீல்டிங் பண்ணும் போது ஃபக்கருக்கு காயமடைய, பாதியிலேயே ஃபீல்ட விட்டு வெளியே போயிட்டாரு.,.. பேட்டிங் இறங்குனப்பையும் ஓட முடியாம தவிச்ச ஃபக்கர், 41 பந்துல 24 ரன் எடுத்து அவுட் ஆனாரு..காயம் பெருசா இருக்கநாள, தொடர்ல இருந்து அவர் வெளியேற, மாற்று வீரரா இமாம் உல் ஹக் Imam-ul-Haq டீம்க்கு திரும்பியிருக்காரு...இந்த ஃபக்கர் ஜமான்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல்ல இந்திய டீம போட்டு பொழ பொழனு பொழந்தாரு....
