கார் பந்தயத்தில் அஜித் குமார் அடுத்த சாதனை - சோசியல் மீடியாவை பதறவிட்ட ரசிகர்கள்

x

பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயப் போட்டியில், நடிகர் அஜித்குமாரின் அணி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. கொட்டும் மழையில் விறுவிறுப்பாக நடந்த பந்தயத்தில் அஜித்குமாரின் அணி அபாரமாக செயல்பட்டது. இந்த வெற்றியை, அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றதை அடுத்து, சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்