Ajith Kumar Latest Interview | Tvk Vijay | விஜய் பெயரை சொல்லி முதல்முறை ஓப்பனாக பேசிய அஜித்
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஜித், எனது படத்தை பாருங்கள் மக்களை influence-ம் செய்ய மாட்டேன், ஓட்டும் கேட்க வரமாட்டேன் என்று கூறினார். தன்னை பார்த்து பலர் ரேஸை விரும்புவார்கள் என்றுதான் எனது வீடியோக்களை பகிர்ந்து வருவதாகவும், எப்போதெல்லாம் ரேஸ் காரில் உட்காருகிறேனோ அப்போதெல்லாம் உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்பது தனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார். சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றன என்றும், ஆனால் உள்நோக்கங்களுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதாக சில போலி சமூக ஆர்வலர்களும் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். அதேபோல எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பதாகவும், நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன் என்றும் கூறினார். தன்னை பிடிக்காதவர்கள் எப்போதுமே தாம் வேற்று மொழிக்காரன் என்றே கூறி வருகின்றனர் என்றும், ஒருநாள் இதே நபர்கள் உரத்த குரலில் தமிழன் என்று அழைப்பார்கள் என்று தெரிவித்தார். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் உயிரே போனாலும் பரவாயில்லை, அனைவரது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.
