#BREAKING || ரசிகர்களுக்கு ஷாக் - மீண்டும் விபத்தில் சிக்கினார் அஜித்

x

நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது பெயரில் அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் ரேஸிங் கம்பெனியும் நடத்திவருகிறார். போர்த்துகல் நாட்டில் நடந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. அதன்பின்னர் துபையில் நடந்த போட்டியில் பங்கேற்ற அஜித்தின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இந்த நிலையில், .'ஸ்பெயினில் நடந்து வரும் Porsche Sprint Challenge கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த நடிகர் அஜித் குமாரின் கார் விபத்து.மீண்டும் விபத்துக்குள்ளானது. ரேஸிங்கில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன காயமின்றி காரில் இருந்து வெளியே வந்து கை அசைத்தார்


Next Story

மேலும் செய்திகள்