"படைத்தலைவன்" பார்த்து விட்டு கண்கலங்கிய விஜயகாந்த் மகன்கள்-உருக்கமாக சொன்ன வார்த்தை
சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில்
படைத்தலைவன் படத்தை பாத்துவிட்டு வந்த விஜயகாந்தின் மகன்கள் ரசிகர்களின் வரவேற்பால் கண்கலங்கி நின்றனர்.
ஜூனியர் கேப்டன் இந்த படத்தில் தெரிவதாகவும், விஜயகாந்த் எங்கேயும் போகவில்லை, நம்மிடையே தான் இருப்பதாகவும் சண்முக பாண்டியனின் அண்ணன் விஜய் பிரபாகரன் உருக்கமாக தெரிவித்தார்.
இத்துடன், விஜயகாந்த் போலவே நடிகர் சங்க தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மக்கள் தன்னை ஒரு நடிகராக ஏற்று கொள்ளட்டும் பிறகு அதனை பார்த்து கொள்ளலாம் என்று படைத்தலைவன் படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் கூறினார்.
Next Story
