பெண்களுக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்த நடிகை டாப்ஸி
பிட்டான புகைப்படங்களுக்காக பெண்கள் தயவுசெய்து தங்களை தாங்களே வருத்திக் கொள்ள வேண்டாம் என இளம்பெண்களை நடிகை டாப்ஸி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி... பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்களின் அடிவயிற்றில் உள்ள இனப்பெருக்க உறுப்புகளைப் பாதுகாக்க, அந்த பகுதியில் சிறிதளவு கொழுப்பு இருப்பது இயற்கையானது மற்றும் அவசியமானது என்றும்...
தொப்பையைக் குறைக்க உடலை அளவுக்கு அதிகமாக வருத்தும்போது, உடல் தண்ணீரைத் தக்கவைத்து அடிவயிற்றுச் சதை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறியுள்ளார்.
பெண்களின் உடல் பல ஹார்மோன் மாற்றங்களைக் கடந்து செல்வதால், வயிறு எப்போதும் ஒரே மாதிரி தட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. என்றும் சமூக வலைத்தளங்களில் பிட்டான புகைப்படங்களைப் பதிவிடுவதற்காகப் பெண்கள் தங்களைச் 'சித்ரவதை' செய்துகொண்டு உடலை வருத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
