கீரவாணி இசையில் பாடியது மகிழ்ச்சி - நடிகை ஸ்ருதிஹாசன்

x

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடலை பாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் "குளோப் ட்ராட்டர்" படத்தை, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வருகிறார். இப்படத்தில் இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில், ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இதை ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பெருமிதம் கொண்டுள்ளார். ஸ்ருதிஹாசன் பதிவிட்ட வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் "தென்பாண்டிச் சீமையிலே" பாடலுக்கு, இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து மகிழ்ந்தது இடம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்