Actress Pavithra Gowda | இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்நடிகை பவித்ரா கௌடா எடுத்த முடிவு

Actress Pavithra Gowda | Supreme Court's decision that brought down the thunder of actress Pavithra Gowda
x

ரேணுகா சாமி கொலை வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி நடிகை பவித்ர கௌடா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் வியாழன் அன்று விசாரிக்க உள்ளது. முன்னதாக கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சாமி கொலை வழக்கில் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், முதுகு வலியால் அவதிப்பட்ட தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்