Nithya Menen | இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த நடிகை நித்யா மேனனின் புதிய அவதாரம்

இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த நடிகை நித்யா மேனனின் புதிய அவதாரம்

Nithya Menen Production | இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த நடிகை நித்யா மேனனின் புதிய அவதாரம் நடிகையாக தன்னை நிரூபித்துள்ள நித்யா மேனன், தற்போது திரையுலகில் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ​

சாதாரண காதல் கதைகளை தாண்டி, சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதிக்கும் நடிகை நித்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய அளவில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'இட்லி கடை' படத்தில் இவருடைய நடிப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 'கியூரி புரொடக்ஷன்ஸ்' (Curie Productions) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், தற்போது தனது முதல் திரைப்பட தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து நித்யா மேனன் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தை இயக்குநர் டி.கே இயக்கவுள்ளார்.

#NithyaMenen #Production #CinemaNews #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com