

புகழின் உச்சியில் இருந்த நடிகை மனிஷா கொய்ராலா, தாம் புற்றுநோயில் இருந்து மீண்டது குறித்து உருக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "HEALED" என்ற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். ''தமது காலடியில் இந்த உலகமே இருப்பதாக நினைப்பு இருந்ததாகவும், இடைவிடாத படப்பிடிப்புகளால் 1999ம் ஆண்டுகளில், உடலும் உள்ளமும் பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார். ''மீள்வதற்கு என்ன வழி? மதுவைத் தவிர என்று தெரிவித்துள்ள அவர், தமது முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை, தவறான முடிவுகளை எடுத்ததாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.