பாக்ஸிங் பயிற்சியில் நடிகை கயாடு லோஹர்
நடிகை கயாடு லோஹர் ஜிம்மல பாக்ஸிங் பயிற்சியில ஈடுப்பட்ட வீடியோ சமூக வலைதளங்கள்ல வைரலாகிட்டு வருது....பிரதீப் ரங்கநாதனோட டிராகன் படம் மூலமா தமிழ்ல அறிமுகமாகி சென்ஷேனல் ஹீரோயினா வலம் வர கயாடு தமிழ்ல சிம்பு, அதர்வானு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களோட நடிக்க கமிட் ஆகியிருக்காங்க.. இந்த நிலையில் கயாடு லோஹர் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோவோட, படப்பிடிப்புக்காக தயாராகி செல்பி எடுத்து சமூக வலைதளத்துல பதிவிட்டிருக்காங்க..
இரவு வானத்தை ஒளிர செய்த இந்த அற்புதமான காட்சி....அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் படம் பிடிக்கப்பட்டவை...வாழ்வில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என பலரும் விரும்பும் நார்தன் லைட்ஸ் அல்லது அரோரா எனப்படும் இந்த வானியல் நிகழ்வு வானை இளஞ்சிவப்பு நிறத்திலும் பச்சை நிறத்திலும் ஒளிரச் செய்து கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. சூரியக் காற்றில் ஏற்படும் ஒளிச் சிதறல் மற்றும் புவியின் காந்தப் புலம் ஆகியவை இணைவதன் மூலம் இந்த நார்த்தன் லைட்ஸை தோன்றுகின்றன."
கடும் குளிர தாக்குபிடிக்குறவங்க தான் இங்க வின்னர்ஸ்னு.... அண்டார்டிகால அல்ட்ரா மாரத்தான் போட்டி உற்சாகமா நடந்துச்சு.. இதுல சீன ஓட்டப்பந்தய வீரர் யுஷெங் நி புது சாதனை படைச்சாங்க.. 42.2 கிலோமீட்டருனு நிர்ணயிக்கப்பட்ட பாரம்பரிய மராத்தான் போட்டி போல இல்லாம... 160.9 கிலோமீட்டர் அப்டின்ற நீண்ட தூர கடும் சவால எதிர்கொள்ள வேண்டிய இந்த அல்ட்ரா மராத்தான 22 மணி நேரம், 40 நிமிடங்கள் மற்றும் 47 வினாடிகள்ல முடிச்சு அசத்திருக்காரு இந்த சீன வீரர்..
