பாவாடை தாவணியில் திருமலையில் நடிகை ஜான்வி சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி சாமி தரிசனம் செய்தார்.
பாவாடை தாவணியில் திருமலையில் நடிகை ஜான்வி சாமி தரிசனம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, சாமி தரிசனம் செய்தார். நடை பயணமாக திருமலை வந்த ஜான்வி ஏழுமலையானை தரிசிக்க பாவாடை - தாவணி உடையில் வந்திருந்தார். பின்னர் சிறப்பு தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாத லட்டு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஜான்வி நடிப்பில் வெளியான "தடக்" திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவரின் 3 படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com