

நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் குடியிருப்பவர் நடிகை ஜெயபாரதி. இவரது வீட்டில் காவலாளியாக உள்ள நேபாளத்தைச் சேர்ந்த ஹர்க்பகதூரும், தனியார் கார் ஓட்டுனர் இப்ராகிமும் இணைந்து சிறுக சிறுக நகைகளை திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபாரதி அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அடகு கடையில் விற்கப்பட்ட 31 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.