இயக்குநராக மாறிய தேவயானிக்கு கிடைத்த விருது - குவியும் வாழ்த்துக்கள்

x

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்த 'கைக்குட்டை ராணி' என்ற குறும்படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்று அசத்தியுள்ளது. இளையராஜா இசையில் உருவான இக்குறும்படம் தாயை இழந்து, தந்தை வெளியூரில் பணிபுரியும் நிலையில், பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக காட்டியுள்ளது. இதையடுத்து 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு இதை தேர்ந்தெடுத்ததோடு தேவயானி மற்றும் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்