"மலையாள திரையுலகம்.." - நடிகை மஞ்சு வாரியார் பரபரப்பு பேச்சு | Manju Warrier | Kerala Cine Industry

மலையாள சினிமா உலகம் கொஞ்சம் சோகமான காலகட்டத்தை கடந்து வருவதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற தனியார் ஷோரூம் திறப்பு விழாவில் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், மக்கள் விரும்பும் வரை மலையாள சினிமா உலகிற்கு எதுவும் நடக்காது என்று கூறினார். தான் நடிகையாக இருப்பதற்கு மலையாள சினிமா தான் காரணம் என்று கூறிய மஞ்சு வாரியர் மலையாள சினிமா உலகம் கொஞ்சம் சோகமான கால கட்டத்தை கடந்து கொண்டிருப்பதாக கூறினார். எல்லாம் தெளிவாக இருக்கட்டும், மேகங்கள் மறையட்டும் என்றும் நடிகை மஞ்சு வாரியர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com