பிரபல நடிகருக்கு சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து பெற்ற 50 லட்சம் ரூபாய் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி தரவேண்டும் என்று நடிகர் யூகி சேதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகரும் இயக்குனருமான யூகி சேது சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் சுரேஷ்குமார் என்பவரிடம் கடந்த 2017ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேஷ்குமார் சார்பில் அவரது மருமகன் அஸ்வனிகுமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் கடன் தொகை 50 லட்சம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து மனுதாரருக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று நடிகர் யூகி சேதுவுக்கு உத்தரவிட்டது. 

X

Thanthi TV
www.thanthitv.com