கே.ஜி.எஃப் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய்...

உலகமெங்கும் வெற்றி நடை போடும் கே.ஜி.எப்., திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.
கே.ஜி.எஃப் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய்...
Published on
உலகமெங்கும் வெற்றி நடை போடும் கே.ஜி.எப்., திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியான இந்த படத்தை, நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை நடிகர் விஜய் பார்த்து ரசித்துள்ளார். அதோடு, படக்குழுவினர் , நடிகர் நடிகைகளை பாராட்டியுள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். "கே.ஜி.எஃப்" நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை அறிந்த "தளபதி" விஜய் இப்படத்தை காண விரும்பினார். அவருக்காக சென்னையில் ப்ரத்யேகமாக இப்படத்தை படக்குழுவினர் திரையிட்டனர். படத்தை பார்த்த நடிகர் விஜய், "கே.ஜி.எஃப்" படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக பாராட்டினார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். "தளபதி" விஜய்யின் பாராட்டை பெற்ற "கே.ஜி.எஃப்" படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com