இன்று நடிகர் விஜய் பிறந்த நாள் - "நாளைய தீர்ப்பு" முதல் "பிகில்" வரையிலான பயணம்

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று.
இன்று நடிகர் விஜய் பிறந்த நாள் - "நாளைய தீர்ப்பு" முதல் "பிகில்" வரையிலான பயணம்
Published on

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று. காதல் நாயகன், ஆக்‌ஷன் ஹீரோவாக ஆனது முதல், அரசியலில் கால்பதிப்பாரா என்பது பற்றியும் அலசுகிறது இந்த தொகுப்பு

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி. பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பிடிப்பதில் கில்லி. அவர் தான் இளைய தளபதி விஜய். சினிமா பின்னணியில் இருந்து வந்த பெரும்பாலான நடிகர்கள் தோல்வியையே சந்தித்திருக்கின்றனர். ஆனால், விதிவிலக்காக, சிலர் மட்டுமே, இன்றும் வெற்றிக்கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். அந்தப்பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் விஜய்.

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்- பின்னணிப் பாடகி ஷோபா தம்பதியினரின், மகனான விஜய், விசுவல் கம்யூனிகேஷன் எனப்படும் காட்சித் தகவலியல் படித்தவர். ஆரம்பகாலகட்டங்களில், தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம், ஹீரோவானார்.

பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி ஆகிய திரைப்படங்கள் விஜய்க்கு காதல் நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com