நடிகர் விமல், நண்பர்கள் மீது வழக்குப்பதிவு

நடிகர் விமல், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து, மற்றொரு நடிகரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விமல், நண்பர்கள் மீது வழக்குப்பதிவு
Published on
நடிகர் விமல், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து, மற்றொரு நடிகரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. "அவன் அவள் அது" என்ற படத்தில் நடித்து வரும் அபிஷேக் என்ற நடிகர், இந்த புகாரை அளித்துள்ளார். படப்பிடிப்பிற்காக தனியார் குடியிருப்பு ஒன்றில், அபிஷேக் தங்கி இருந்தபோது, அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் விமல், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அபிஷேக் அளித்த புகாரின் அடிப்படையி​ல் விமல் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com