நடிகை திரிஷாவின் புதிய திரைப்படம் 'ராங்கி'

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகை திரிஷாவின் புதிய திரைப்படம் 'ராங்கி'
Published on
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தினை இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு 'ராங்கி' என பெயரிட்டுள்ளனர். நேற்று பூஜையுடன் துவங்கி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மான் கரத்தே படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com