நடிகர் சிம்பு திருமணம் | கண்கலங்கி எமோஷனலாக டி.ராஜேந்தர் சொன்ன வார்த்தை
நடிகர் சிம்பு திருமணம் குறித்து அவரது தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் கலங்கிய கண்களோடு உருக்கமாக பேசினார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் பேசிய சீரியல் நடிகை ஒருவர், நான் சிம்புவை தான் திருமணம் செய்வேன் என கூறினார். இதைகேட்டு எமோஷனலான இயக்குநர் டி.ராஜேந்தர், என் மகனை உண்மையிலேயே உயிருக்கு உயிராக நேசிக்க கூடிய ஒரு பெண்ணை கடவுள் கொடுக்கணும் என்றார். நானும் என் மனைவியும் சிம்புவை கட்டாயப்படுத்தினால் அவர் மறுக்க மாட்டார், ஆனால் அதற்கான நாங்கள் அதை செய்யமாட்டோம் என டி.ராஜேந்தர் பேசினார்.
Next Story
