

நடிகர் சிம்புவின் புதிய படத்தை சேரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில், சேரன் முழு நேர இயக்குனராக களமிறங்கும் முடிவில் உள்ளார். மேலும், நடிகர் சிம்புவிடம் காதல் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அது சிம்புக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.