நடிகர் ஷாம் தனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். சுந்தர்.சி தயாரிப்பில், இயக்குனர் பத்ரி இயக்கிய நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தில் ஷ்யாம் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி வரும் ஷாம் தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.