வீட்டிலேயே சூதாட்ட கிளப் - நடிகர் ஷாம் கைது

வீட்டில் சூதாட்ட க்ளப் நடத்தியதாக திரைப்பட நடிகர் ஷாம் உட்பட14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டிலேயே சூதாட்ட கிளப் - நடிகர் ஷாம் கைது
Published on

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் ஷாம், வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியானது. தகவலின் பேரில் அங்கு சென்ற நுங்கம்பாக்கம் போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உள்பட14 பேரை கைது செய்தனர். ஊரடங்கு எதிரொலியாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நடிகர்கள் தவிர தொழிலதிபர்கள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், உணவக உரிமையாளர்கள், புதிய இயக்குனர், வழக்கறிஞர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணப்புழக்கம் நடைபெற்றது தெரியவந்தது. இதனிடையே, காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com