சிறுவன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்....மகிழ்ச்சியில் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் குருக்குலையா பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை நடிகர் ராகவா லாரன்சால் துவக்கி வைத்தார். குருக்குலையா பட்டியை சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனது ஊர் மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்படுவதாக வேதனை தெரிவித்தார். இதைக்கேட்ட ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை நிதியிலிருந்து குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட் அமைத்துக் கொடுத்து அதை துவக்கி வைத்தார்... முன்னதாக கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்...
Next Story
