நடிகர் கருணாகரன் வீட்டில் நகை திருட்டு... 60 சவரன் நகையை திருடிய பணிப்பெண்...

நடிகர் கருணாகரன் வீட்டில் நகை திருட்டு... 60 சவரன் நகையை திருடிய பணிப்பெண்...
Published on

பிஸி ஆர்டிஸ்டாக வளம் வரும் கருணாகரன், சென்னை ஓஎம் ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாகரனின் வீட்டு பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை காணாமல் போயிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாகரனின் மனைவி தென்றல், சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கருணாகரனின் வீட்டிற்கு சென்று விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். வீட்டின் கதவு, பீரோ என எதுவும் உடைக்கப்படாததால் இது வெளி நபர்களின் வேலை இல்லை என போலீசார் உறுதி செய்தனர்.

இதனால் சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டில் உள்ளவர்கள் முதல் வேலை செய்பவர்கள் வரை அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். அதில் தான் பணிப்பெண்ணாக வேலை செய்யும் காரப்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த விஜயா என்பவரின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் வலுத்திருக்கிறது.

உடனே 44 வயதான விஜயாவை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அதில் தான் விஜயா, நகையை களவாடியது தெரிய வந்திருக்கிறது.

பீரோவில் எவ்வளவு நகை உள்ளது, பீரோவின் சாவி எங்கே வைப்பார்கள் என்று விஜயாவுக்கு நன்கு தெரியும். இதனால் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் அறைக்குள் நுழைந்து சாவியை எடுத்து நகையை திருடியது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

நடிகர் கருணாகரனின் வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்த நடிகர்களின் வீட்டு திருட்டு சம்பவங்களோடு பெரிதும் ஒத்துப்போகிறது.

காரணம் அந்த திருட்டு சம்பவங்களையும் செய்தது, வீட்டில் வேலை செய்த பணிப்பெண்கள் தான். சமையலறை முதல் படுக்கையறை வரை நுழையும் அனுமதி பெற்ற பணிப்பெண்கள் முதலாளிகள் அசந்த நேரத்தில் இப்படி ஒரு திருட்டு வேலையை பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 60 சவரன் நகையை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும் விஜயா எப்படி இந்த களவை அரங்கேற்றினார்? நகைகளை எப்படி வீட்டிற்கு எடுத்து சென்றா? இந்த திருட்டுக்கு வேறு யாரேனும் உறுதுணையாக இருந்தார்களா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி போலீசார் விஜயாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணை நடத்திய பிறகே உணமை தெரியவரும்

X

Thanthi TV
www.thanthitv.com