புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டைலர் பெர்ரி மீது நடிகர் பாலியல் புகார்
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான டைலர் பெர்ரிக்கு எதிராக மீண்டும் பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "பூ! எ மேடியா ஹாலோவீன்" படத்தில் நடித்த மரியோ ரோட்ரிக்ஸ் (Mario Rodriguez) என்ற நடிகரால் இந்த பாலியல் வழக்கானது தொடரப்பட்டுள்ளது. டைலர் பெர்ரி நடிக்க வாய்ப்பு தருவதாக வீட்டிற்கு அழைத்து தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மரியோ குற்றம் சாட்டியுள்ளார். டைலர் பெர்ரி மீது பதியப்படும் 2வது பாலியல் வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
