மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நடிகர் திலீப் விலகியுள்ளார். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலீப்பை சேர்த்ததற்கு பல நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர், தன்னை நிரபராதி என ரசிகர்களிடமும்,பொதுமக்களிடமும் நிரூபிக்கும் வரை எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.