"இந்த மனசு யாருக்குங்க வரும்".. "இனி ஒரு உயிர் கூட போகாது" - நடிகர் பாலாவை கொண்டாடும் மக்கள்

x

ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் விஜய் டிவி புகழ் நடிகர் பாலா இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளது மலை கிராம மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது... மருத்துவ அவசர காலங்களில் மிகவும் அவதிப்பட்டு வந்த இக்கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க தன்னார்வ அமைப்பினர் மூலம் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடிகர் பாலா, மாவட்ட எஸ்.பி, மாநகராட்சி மேயர் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக மலை கிராம மக்கள் பாலாவுக்கு மலைகிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்