

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு நடிகர் அஜித், H.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்தில் மெட்ராஸ், வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவெல் நவகீதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இதற்கு பதிலளித்த பிரசன்னா, தகவல் உறுதியாகவில்லை' என்று பதிலளித்துள்ளார்.