நடிகர் ஆதித்யா.. பாஸ்கர், கௌரி கிஷன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
96 படத்தின் மூலம் அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் மீண்டும் இணைந்து நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1 படப்பிடிப்பு நிறைவடைஞ்சிருக்கறதா படக்குழு அறிவிச்சிருக்கு.. அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்துல உருவாகியுள்ள இந்த படத்துல,சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க...
எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைச்சிருக்க இந்த திரைப்படத்த ஆர்ஜின் ஸ்டுடியோஸ் (Origin Studios) நிறுவனம் தயாரிச்சிருக்கு.. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பா நடைபெற்றுவரதாவும், விரைவில் படத்தோட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும்னு படக்குழு தெரிவிச்சிருக்கு...
Next Story
