சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் விருது
நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சூர்யாவிற்கு... ஏ.ஆர்.ரகுமானின் விருதை மாற்றிக்கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது அதில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' (2020) படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு கொடுக்கவேண்டிய பெயர் போட்ட விருதை தவறுதலாக நடிகர் சூர்யாவுக்கு கொடுத்து விட்டனர். மேடையில் இதைப் பார்த்த சூர்யா மற்றும் மேடையில் இருந்து கீழே இறங்கி இதனை இசையமைப்பாளருக்கு ஏ ஆர் ரகுமானுக்கு காண்பித்து அவர் இருக்கையில் அமர்ந்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது"
