சாதுக்கள் கொடுத்த ஒரு கடிதம்.. சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து..
சாதுக்களின் போராட்டத்தால் சன்னிலியோன் நிகழ்ச்சி ரத்து
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற இருந்த நடிகை சன்னிலியோனின் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, சாதுக்களின் தொடர் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகை சன்னிலியோன் பங்கேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்கு அப்பகுதி சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் புனிதமான மதுரா நகரத்தை நாங்கள் களங்கப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என மாவட்ட ஆட்சியருக்கு கடிதமும் வழங்கினர். இந்நிலையில் சன்னிலியோனின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story
