ரெடியாகும் பிரம்மாண்ட மூவி ஸ்டுடியோ - லிஸ்ட் போட்டு அடுக்கிய நடிகர் சரவணன்
சேலத்தில் மீண்டும் பிரம்மாண்டமான திரைப்பட ஸ்டுடியோ தொடங்க உள்ளதாக, நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியில் 3.5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக சேலம் சரவணன் ஸ்டுடியோ மற்றும் அருள்மிகு வெற்றி விநாயகர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி வருகை தர உள்ளனர். இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த சரவணன் பல்வேறு வசதிகளுடன் கூடிய திரைப்பட ஸ்டுடியோ அமைக்க உள்ளதாகவும், தனக்கு அது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
