

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், 66வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார்.
இதில் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கிய "பாரம்" என்ற தமிழ் படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை ஆயுஷ்மான் குரானா மற்றும் விக்கி கவுசல் பெற்றனர். சிறந்த நடிகைக்கான விருதை "மகாநடி" படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் விருதுகளை கே.ஜி.எப் படம் வென்றது.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வாகியிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை.