Theatre | Movie Release | இன்று ஒரே நாளில் ரிலீசான 6 படங்கள் - திருவிழா கோலமாக மாறிய தியேட்டர்
கவின் ஹீரோவாக நடித்து மாஸ்க், மிடில் கிளாஸ், அர்ஜுனின் தீயவர் குலை நடுங்க, யெல்லோ, இரவின் விழிகள் திரைப்படங்கள் இன்று தியேட்டரில் வெளியாகிறது. மாஸ்க் திரைப்படத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். இந்த படத்தை விகர்னன் இயக்கியுள்ள நிலையில், இயக்குனர் வெற்றிமாறன், ஆண்ட்ரியா இணைந்து தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மிடில் கிளாஸ் படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கி, முனீஸ்காந்த் கதாநாயகனாக, விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளனர். திரில்லர் படமான தீயவர் குலை நடுங்க படத்தில் அக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பிக் பாஸ் பூர்ணிமா நடிப்பில் யெல்லோ, சோஷியல் மீடியா மோகத்தின் பாதிப்பை உணர்த்தும் இரவின் விழிகள் ஆகிய படங்கள் வெளியாகின்றன. இவற்றுடன் விஜய், சூர்யா நடித்த பிரண்ட்ஸ் படமும் இன்று ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது.
