600க்கு 562 மார்க்.. அரசு பள்ளி மாணவியின் IAS கனவுக்கு விதை போட்ட கமல்

x

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சோபனாவின் உயர்கல்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் உதவியுள்ளார்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்வாகிய சோபனா, குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் சென்ற நிலையில், இது குறித்த செய்தியை சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்ட கமலஹாசன், உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்