'காதலன்' திரைப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவு
90ஸ் காலகட்டத்தின் ட்ரெண்ட் செட்டர்களில் ஒன்றாக விளங்கிய காதலன் படம் வெளியாகி 31 ஆண்டுகள் ஆச்சு... ஷங்கர் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், பிரபுதேவா, நக்மா, எஸ் பி பி, ரகுவரன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவான படம்தான் காதலன். உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தோட உடல்னா, உயிரா நிறைஞ்சது ஏ.ஆர்.ரகுமானோட இசைதான்.. ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம்... இந்தப் படத்துல ஆளுநரின் மகளை ஒரு இளைஞர் காதலிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால, அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி கோபமடைந்தது குறிப்பிடத்தக்கது.