குருதிப்புனல், முத்து திரைப்படங்கள் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு
நடிகர் கமல்ஹாசனின் குருதிப்புனல் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படங்கள் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1995-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக பல படங்கள் வந்தாலும், முத்து மற்றும் குருதிப்புனல் படங்கள் மக்களை அதிகளவில் கவர்ந்தன. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய குருதிப்புனல் படத்தில், கமல்ஹாசன், அர்ஜுன், நாசர், கவுதமி மற்றும் கீதா ஆகியோரது நடிப்பு பெருமளவில் பாராட்டப்பட்டது. அதே போல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு நடித்த முத்து படத்தை, இன்று வரையிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை, ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Next Story
