12 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள ஸ்ருதி ஹாசன் - ரசிகர்கள் வாழ்த்து

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளாக சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
12 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள ஸ்ருதி ஹாசன் - ரசிகர்கள் வாழ்த்து
Published on
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளாக சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஊரடங்கால் வீட்டிலேயே இருந்தாலும், அவர் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது, தான் சினிமாத்துறையில் நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சியுடன் தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இத்தனை ஆண்டுகள் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். இதையடுத்து, ஸ்ருதிக்கு அவரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்
X

Thanthi TV
www.thanthitv.com