வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீனா..தத்தளிக்கும் மக்கள்

x

தென்மேற்கு​ சீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். குவாங்ஸி Guangxi ​பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கித்தவித்த மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்த நிலையில், நீரில் மூழ்கிய கார்களை மீட்கும் பணிகள் நடைபெற்றன.

மழை பாதிப்புகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்