Chennai New Mall | ரூ.750 கோடியில் சென்னையில் வரப்போகும் பிரம்மாண்ட மால்
Chennai New Mall | ரூ.750 கோடியில் சென்னையில் வரப்போகும் பிரம்மாண்ட மால்
சென்னையின் 750 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் டவுன்ஷிப் திட்டமான S.P.R. சிட்டி எனப்படும் வணிக வளாகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான ஓக்ட்ரீ கேபிடல் (Oaktree Capital) இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் 6 திரையரங்கள், 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன.
The Market of India, The Mall of Madras ஆகியவை இணைந்து 35 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரியவருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து வெறும் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரம்பூர் மில் பகுதியில் மிகவும் பிரமாண்டமாக இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Next Story
