சென்னை ஏர்போர்ட்டில் திறு திறுவென திரிந்த ஊழியர்.. மடக்கி பிடித்ததில் தெரிந்த பகீர் காரணம்

x

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்த அஜய் என்பவர் நேற்று சந்தேகிக்கும் வகையில் உலா வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவரை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது கால் உறைக்குள் 4 பிளாஸ்டிக் கவர்களில் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 400 கிராம் தங்கம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கொழும்பில் இருந்து வந்த நபர் தங்கத்தை கொடுத்தது தெரியவர, அவரிடம் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்